தினமும் பத்தே நிமிஷ பயிற்சியில் தொப்பையை குறைக்கலாம்

 

தினமும் பத்தே நிமிஷ பயிற்சியில் தொப்பையை குறைக்கலாம்

நாற்பது வயதைக் கடந்தவர்களில் பெரும்பாலும் யாருமற்ற தனிமையில் கண்ணாடி முன் நின்று தொப்பையை இழுத்து பார்க்கும் நிலையில் தான் இருக்கிறோம். இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள்.

நாற்பது வயதைக் கடந்தவர்களில் பெரும்பாலும் யாருமற்ற தனிமையில் கண்ணாடி முன் நின்று தொப்பையை இழுத்து பார்க்கும் நிலையில் தான் இருக்கிறோம். இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். உணவு கட்டுப்பாடுகள், ஜிம், உண்ணாவிரதம் என்று ஏகப்பட்ட முயற்சிகளை செய்தும் பலனளிக்கவில்லை என்று சோர்ந்து போகாமல், அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். ஆனால், ஸ்கிப்பிங் பயிற்சியை முறையாக செய்ய வேண்டும். 

belly fat

ஸ்கிப்பிங் பயிற்சியை தினமும் 10 நிமிஷம் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.
கயிற்றின் இருமுனைகளும் உங்கள் அக்குள் பகுதிவரை இருந்தால் அந்தக் கயிறுதான் உங்களுக்கு ஏற்ற கயிறு. முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது குதிக்காலின் கீழ் வைத்துக்கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழலவிட்டு அதன் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்டித் தாண்டிக் குதிக்கவும்.

skipping

முதலில் மெதுவாக ஆரம்பித்து, பிறகு வேகத்தை சீராகக் அதிகரிக்க வேண்டும். இதய நோயாளிகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் ஸ்கிப்பிங் செய்யவேண்டும். புல்தரை, மணல் போன்ற மிருதுவான தரைப்பரப்பில்தான் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்.
கான்கீரிட் போன்ற கடினமான தளங்களில் ஸ்கிப்பிங் செய்யக்கூடாது. அப்படிச் செய்யும்போது மூட்டுகளில் பிரச்னைகள் ஏற்படும். கட்டாயமாக ஷூ அணிந்து இருக்க வேண்டும். அவை பொருத்தமான அளவிலும் தரமானதாகவும் இருக்கவேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தது 100 முறை தாண்டலாம்.
ஸ்கிப்பிங் செய்யும் இடம் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் குறைவான ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாகச் செய்யும்போது மற்றவர்களைவிட அதிகமுறை செய்கிறேன் பேர்வழி என மல்லுக்கட்டி நிறைய முறை செய்ய வேண்டாம். இறுக்கமான ஆடைகளை அணிந்து ஸ்கிப்பிங் செய்யக்கூடாது.
ஸ்கிப்பிங் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்……..

skipping

10 நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி, எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடியதற்குச் சமம். ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். கூன் விழாமல் தடுக்கலாம். உடலுக்கும் மனதுக்கும் ஒரு சேரப் பயிற்சி கிடைப்பதால் மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற பிரச்னைகள் நீங்கி மனம் ஒருமுகப்படும்.
ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங். உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளறுகள் நீங்குகின்றன.
உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன்,இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது. கை, கால், தொடைப்பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன.

skipping

மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன் முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது. ஆரோக்கியம், அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியம் ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும்.
ஸ்கிப்பிங் தானே என ஏளனமாக நினைத்து இந்த ஐடியாவை ‘ஸ்கிப்’ செய்யாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன் பெறுங்கள்.