தினமும் சிக்கி சாகிறேன்: அற்புதம்மாள் உருக்கம்

 

தினமும் சிக்கி சாகிறேன்: அற்புதம்மாள் உருக்கம்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தினம் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கி சாகிறேன் என அவரது தாயார் அற்புதம்மாள் உருக்கமாக கூறியுள்ளார்.

சென்னை: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தினம் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கி சாகிறேன் என அவரது தாயார் அற்புதம்மாள் உருக்கமாக கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு எதிராக பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலை கோப்பு கையெழுத்தாகல. தினம் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கி சாகறேன். தாமதம் ஏன்னு கேட்டு அறிவு ஒரு RTI அனுப்பினான். 48 மணி நேரத்துல பதில் கேட்டு 48 நாளும் ஆயிருச்சு. பதில காணோம்.அரசியல் சட்டத்துக்குதான் மதிப்பில்ல. RTI யுமா செல்லாம போயிரும்? என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.