தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் எவ்வளவு நன்மை தெரியுமா!

 

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் எவ்வளவு நன்மை தெரியுமா!

தயிர் உடலுக்கு தேவையான ஒரு அருமருந்து. சிலருக்கு தயிர், மோரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு உள்ளே இறங்காது

தயிர் உடலுக்கு தேவையான ஒரு அருமருந்து. சிலருக்கு தயிர், மோரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு உள்ளே இறங்காது.

தயிர் நமது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் லாக்டோ இருக்கிறது. தயிரில் லாக்டோபேசில் என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட டாக்டர்கள் சொல்வது இதனால்தான்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் பச்சடியை சாப்பிடுகிறோம்.

curd

இளம் பெண்கள் தயிர் சாப்பிடுவதால், அவர்களின் உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

சரியான நேரத்துக்கு உணவு உண்பது பல உடல் உபாதைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வழி செய்யும். ஆனால் வேலைப்பளுக் காரணமாக உரிய நேரத்தில் உணவு உண்ண முடியவில்லை என்றால் அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

அல்சர் பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்சருக்குக் காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச்சத்துக்களும் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

மூளையின் திறனை அதிகரிக்கும் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கும் அனைவருக்கும் நல்ல ஞாபக சக்தியைத் தரும்.

தயிர் சாப்பிடுவதால் சருமம் பளபளக்கும். நீண்ட கூந்தலையும் பெறலாம்.

உடல் இளைப்பதற்கும் தயிர் உதவுகிறது. இதயநலத்துக்கும் நல்லது.

குறிப்பாக பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்னைகளை அறவே நீக்கிவிடும் சிறப்பான குணம் தயிருக்கு உண்டு