தினமலரை வசைப்பாடும் நெட்டிசன்கள்…. போகாத சந்திராயனை விண்ணில் செலுத்திய கொடுமை.!

தினமலரை வசைப்பாடும் நெட்டிசன்கள்…. போகாத சந்திராயனை விண்ணில் செலுத்திய கொடுமை.!

சந்திராயன் 2 செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் பணி கடைசி நேரத்தில் தொழில்நுட்பக்காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தினமலர் நாளிதழ் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.

சந்திராயன் 2 செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் பணி கடைசி நேரத்தில் தொழில்நுட்பக்காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தினமலர் நாளிதழ் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.

sss

முற்றிலும் இந்திய தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணியளவில் 3.8டன் எடைகளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்தது. 
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவது 56 நொடிகளில் நிறுத்தப்பட்டது. இன்னும் 30 நாட்களில் மீண்டும் விண்ணில் பாயும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ss

ராக்கெட்டை உந்திச் செல்லக்கூடிய திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட எரிபொருட்கள் ராக்கெட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ராக்கெட்டை முழுவதுமாக ஆய்வு செய்த பின்னர்தான் தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

tt
கவுண்டவுன் பாதியிலே நிறுத்தப்பட்டு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில் தினமலர் நாளிதழ் சந்திராயன் விண்ணில் ஏவப்பட்டதாக முதல் பக்கத்திலேயே தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது.

ll

ஏற்கனவே தினமலர் மீது அதிருப்தியிலிருக்கும் நெட்டிசன்களும், பொதுமக்களும், விண்ணுக்கு செல்லாத செயற்கைக்கோளை செலுத்திய தினமலரை வசைப்பாடி வருகின்றனர்.