தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கு – ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை

 

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கு – ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

மதுரை :

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

9 பேருக்கு ஆயுள் தண்டனை 

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் கடந்த வாரம் வியாழக்கிழமை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, இவ்வழக்கில் குற்றவாளிகளான அட்டாக்பாண்டி, ஆரோக்கியபிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையாபாண்டி, சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்ஷா ஆகிய 9 பேருக்கும் தலா 3 ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

தினகரன் அலுவலகம்

மேலும், பெட்ரோல் குண்டு வீச்சின் போது உயிரிழந்த, ஊழியர்கள் வினோத், கோபி, முத்துராமலிங்கம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குற்றத்தைத் தடுக்கத் தவறிய குற்றம் 

தினகரன் அலுவலகம்

இச்சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அப்போதையை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் மார்ச் 25 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், அப்போது அவருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து தெரிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, அவர் இன்று ஆஜரான நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

 

 இதையும் படிங்க :

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு – குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது மதுரை உயர் நீதிமன்றம்