திண்டிவனத்தில் 7 நாட்கள் கடையடைப்பு அறிவிப்பு!

 

திண்டிவனத்தில் 7 நாட்கள் கடையடைப்பு அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகரிப்பதை தடுக்கும் நடவடிக்கையாக செஞ்சி நகருக்குள் வெளி நபர்கள் நுழையாதவாறு சுற்றி சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணை மற்றும் அறிவுறுத்தலின்படி 144 தடை உத்தரவு முடியும் வரை நெல் கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்வதாக நெல் அரிசி சங்கம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே விவசாயிகள் தமிழக அரசின் 144 தடை காலம் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் தங்கள் விளைபொருட்களை கொண்டு வருமாறு செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அறிவித்திருக்கிறார்.

coronavirus

இதேபோல் திண்டிவனத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 7நாட்கள் கடையடைப்பு செய்யப்போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். ஏப்.16,17,18,23,24,25,30 ஆகிய தேதிகளில் கடையடைப்பு நடத்தப்படுமென வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.