திட்டமிட்ட படி நாளை பள்ளிகள் திறக்கும்..பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு !

 

திட்டமிட்ட படி நாளை பள்ளிகள் திறக்கும்..பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு !

வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையாததால் பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டு 6 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்தது. அதன் பின்னர், டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை என்றும் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வந்து விட்டதால் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ttn

இந்த முடிவு ஆசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை முடிய விடியற்காலை ஆகும் என்பதால், அதற்கு மறுநாளே பள்ளிகளுக்குச் செல்வது மிகவும் சிரமம் என்றும் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்குமாறும் ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், மூன்றாவது முறையாகத் தேதியை மாற்றி 4 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தனர்.  

ttn

ஆனால், வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையாததால் பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டு 6 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில், ” திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்வதால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படும் என்ற தகவலில் பொய்யானது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அரையாண்டு விடுமுறைக்குப் பின் அனைத்து அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெரும் பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன.