திட்டமிட்டபடி இந்த இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்.. வங்கி ஊழியர்கள் கெடுபிடி!

 

திட்டமிட்டபடி இந்த இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்.. வங்கி ஊழியர்கள் கெடுபிடி!

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வரும் 31 ஆம் தேதி மற்றும் பிப்.1 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வரும் 31 ஆம் தேதி மற்றும் பிப்.1 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து, வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறு டெல்லியில் நிதித்துறை அதிகாரிகள், வங்கி தலைமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ttn

அப்போது, வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்றால் வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு வங்கி ஊழியர்கள் சங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால், முன்னதாக அறிவிக்கப்பட்ட படி  வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடக்கும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ttn

அப்போது பேசிய அவர், பொதுவாக வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் போடப்படும். இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்தோடு நிறைவடைந்ததால், புதிய ஒப்பந்தம் நவம்பர் மாதம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது வரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. மத்திய நிதித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை. எனவே, திட்டமிட்டபடி வரும் 31 மற்றும் பிப்.1 ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.