திட்டமிடுதல் இல்லாத தமிழக அரசு… சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

திட்டமிடுதல் இல்லாத தமிழக அரசு… சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

திட்டமிடுதல் இல்லாத தமிழக அரசு… சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
எந்த ஒரு திட்டமும் இன்றி கோயம்பேடு மார்க்கெட்டை செயல்பட அனுமதித்த தமிழக அரசு, கொரோனா பரவல் காரணமாக திடீரென்று முழுவதுமாக மூடியிருப்பதால் சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எந்த ஒரு திட்டமிடலும் இன்றி மத்திய, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கை அறிவித்தன. ஒன்றை, இரட்டை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்தபோது முழு ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, மூன்று இலக்கத்தில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியுள்ளது.

koyambedu-market-78

ஊரடங்கில் புது முழு ஊரடங்கை அமல்படுத்தி, மக்கள் மத்தியில் உணவுத் தட்டுப்பாடு பீதியை ஏற்படுத்தி வீட்டைவிட்டு வெளியே வர செய்தது. அரசின் முழு ஊரடங்கு காரணமாக கோயம்பேடு சந்தையில் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் கூடியது. இதனால் கொரோனா பரவல் தடுப்பு என்பது கேள்விக்குறியானது. கொரோனா பரவல் மையமாக கோயம்பேடு மாறுவதைக் கண்டு கடைகளை தற்காலிகமாக இட மாற்றம் செய்ய அரசு முன் வந்தது. ஆனால், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசு என அனைத்துத் தரப்பும் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்வை அது வழங்கவில்லை. இதனால் வியாபாரிகள், தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, கோயம்பேடு சந்தையை முற்றிலுமாக தமிழக அரசு மூடியது.
காய்கறி தட்டுப்பாட்டை தடுக்க முழு நடவடிக்கை எடுத்த பிறகு திருமழிசைக்கு சந்தையை மாற்றியிருக்கலாம். அதுவரைக்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, கடும் கட்டுப்பாடுகள் விதித்து கோயம்பேட்டிலேயே காய்கறி, பழங்கள் விற்பனையை ஒழுங்கு படுத்தியிருக்கலாம்.

koyambeduu-67

அல்லது வணிகர் சங்கங்களை அழைத்து பேசி, அந்த அந்த பகுதிக்கு தேவையான காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை அந்த அந்த பகுதிக்கே வரும் வகையில் சரக்குகளை பிரித்து அனுப்ப ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யாமல் கோயம்பேடு சந்தையை தமிழக அரசு மூடியதால் வணிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இதனால், கோயம்பேடு சந்தையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு சரக்குகள் கையாள்வது நிறுத்திவைக்கப்படுவதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர். இதனால் சென்னை முழுக்க காய்கறி பழங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எத்தனை பேர் திருமழிசை செல்ல உள்ளனர், சென்னை, புறநகர் பகுதி சிறு வணிகர்கள் எத்தனைபேர் திருமழிசை சென்று பொருட்களை வாங்குவார்கள்… அத்தனைபேரும் அங்கு குவிந்தால் கோயம்பேட்டை விட நிலைமை மோசமாகுமே, அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை. அரசு இப்படித்தான் செயல்படும், கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று தமிழக அரசு சொல்லாமல் சொல்வது போல் உள்ளது அதன் ஒவ்வொரு நடவடிக்கையும்.