திட்டமிடப்படாத ஊரடங்கை நடைமுறைப்படுத்தியதால் குழப்பம்… மத்திய அரசை சாடிய சோனியா காந்தி….

 

திட்டமிடப்படாத ஊரடங்கை நடைமுறைப்படுத்தியதால் குழப்பம்… மத்திய அரசை சாடிய சோனியா காந்தி….

ஊரடங்கு அவசியமாக இருக்கலாம் ஆனால் திட்டமிடப்படாத ஊரடங்கை நடைமுறைப்படுத்தியன் விளைவாக குழப்பம் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை குற்றச்சாட்டி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 25ம் தேதி முதல் 3 வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தார். இதனை காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நேற்று நடைபெற்றது.

பிரதமர் மோடி

அந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் மற்றும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள லாக் டவுன் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், ஊரடங்கு அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால் திட்டமிடப்படாத ஊரடங்கை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடு முன்னோடியில்லாத வகையில் சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில் உள்ளது. 

காங்கிரஸ்

நம் முன் உள்ள சவாலின் அளவு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆனால் அதை சமாளிப்பதற்கான நமது தீர்மானம் பெரிதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.