திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும்: தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி பேச்சு

 

திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும்: தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி பேச்சு

மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்

டெல்லி: மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக வசமிருந்த ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள் காங்கிரஸ் இடம் சென்றது அக்கட்சியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதித்த பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. முந்தைய ஆட்சியில் பண வீக்கம் அதிகமாக இருந்தது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போது, தற்போது பணவீக்க்கம் கட்டுக்குள் உள்ளதாகவும் பிரதமர் மோடி விளக்கமளித்தார்.

மத்திய அரசு தொழில்துறையில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, 3 மாதங்களில் 5 லட்சம் பேர் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். பெண்களுக்கு அதிகளவில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, விலை வாசி உயர்வை சிறப்பாக மத்திய அரசு கையாண்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.