திடீர் நெஞ்சுவலி காரணமாக மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: தற்போதைய நிலை என்ன?

 

திடீர் நெஞ்சுவலி காரணமாக  மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: தற்போதைய நிலை என்ன?

இதையடுத்து  இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(87) நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு 8.45 மணிக்கு  டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து  இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

tt

தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் கூறும் போது,  “மருத்துவர் நிதிஷ் நாயக் கண்காணிப்பில் மன்மோகன் சிங் உள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. ஆனாலும் மருத்துவ கண்காணிப்பு தேவை என்பதால் அவர் சமருத்துவமனையில் உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tt

மன்மோகன் சிங் ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர்,  மத்திய நிதியமைச்சர்,  ரிசர்வ் வங்கியின் ஆளுநர்,  மேலும் 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.