‘திடீரென பெய்த கனமழை’.. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்!

 

‘திடீரென பெய்த கனமழை’.. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்!

இந்த வெப்பத்தையே மக்கள் தாங்க முடியாமல் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இருக்கும் வெப்பத்தை எப்படித் தாங்கப் போகிறோமோ என்று மக்கள் பெரும் கவலையுடன் இருந்தனர்.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பம் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இந்த வெப்பத்தையே மக்கள் தாங்க முடியாமல் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இருக்கும் வெப்பத்தை எப்படித் தாங்கப் போகிறோமோ என்று மக்கள் பெரும் கவலையுடன் இருந்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதமே வெயில் அடிக்க தொடங்கி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்தது. 

ttn

நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட  9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ஆங்காங்கே மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்தன. இந்நிலையில், நேற்று கன்னியாகுமரி, கொட்டாரம், பூதப்பாண்டி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை இடைவிடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெயில் அதிகமாக இருக்கும் போது கொஞ்சம் மழை பெய்யக் கூடாதா என்று எண்ணிய மக்களுக்கு இந்த மழை பெரும் மகிழ்ச்சியை அளித்தது.