திடீரென தீப்பிடித்த வீடு.. 7 பேரின் உயிரைக் காப்பாற்றிய 5 வயது சிறுவன் : விருது வழங்கி பாராட்டு !

 

திடீரென தீப்பிடித்த வீடு.. 7 பேரின் உயிரைக் காப்பாற்றிய 5 வயது சிறுவன் : விருது வழங்கி பாராட்டு !

இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென அவர்களின் வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்துள்ளது.

ஜார்ஜியாவில் உள்ள ஒரு வீட்டில்  8 பேர் வசித்து வருகின்றனர். அதில் நோவ் வூட்ஸும் என்னும் 5 வயது சிறுவனும் ஒருவன். இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென அவர்களின் வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்துள்ளது. அதனைப் பார்த்த சிறுவன் பதற்றம் அடையாமல் முதலில் அவனது தங்கையை எழுப்பி ஜன்னல் வழியாக வெளியே அனுப்பியுள்ளான்.

ttn

அங்கு இருந்த அவர்களின் நாயையும்  தூக்கி ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டு, பக்கத்து ரூமில் உறங்கிக் கொண்டிருந்த தன் மாமா உள்ளிட்டோரை எழுப்பியுள்ளான். இதனையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி தீ விபத்தில் இருந்து அந்த சிறுவனால் தப்பியுள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவர்களின் வீட்டில் ஏற்பட்டிருந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ttmn

அப்போது நோவ்க்கு பாராட்டுக்கள் தெரிவித்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் சிறுவனைப் பாராட்டும் விதமாகப் பாராட்டு விழா ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் நோவ்க்கு விருது வழங்கிய பின்னர் பேசிய அதிகாரி,  “சூப்பர் மேன்களுக்கு உருவம் என்பது இல்லை. ஆனால், அதற்கு வயதும் இல்லை என்பதை நோவ் மூலம் தெரிந்து கொண்டேன். துரிதமாக செயல்பட்டு அவனின் குடும்பத்தினரை நோவ் காப்பாற்றியுள்ளான்” என்று கூறினார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.