திடீரென கூட இருக்கும் தமிழக அமைச்சரவை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் முக்கிய முடிவு?

 

திடீரென கூட இருக்கும் தமிழக அமைச்சரவை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் முக்கிய முடிவு?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 24ம் தேதி கூட இருக்கிறது.

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 24ம் தேதி கூட இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் வருகின்ற 24ம் தேதி பகல் 12 மணியளவில் கூட இருக்கிறது.

edappadi

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தமிழக அரசு போதுமான அழுத்தம் தரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே, 13 உயிர்களைக் காவு வாங்கிய ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என அதன் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட இருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஸ்டெர்லைட், மேகதாது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.