திடீரென இறந்த மான்… கிலோ கணக்கில் உள்ளாடைகளும், பிளாஸ்டிக் பொருட்களும்  இருந்த கொடுமை!

திடீரென இறந்த மான்… கிலோ கணக்கில் உள்ளாடைகளும், பிளாஸ்டிக் பொருட்களும்  இருந்த கொடுமை!

இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதுமே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிரான பிரச்சாரங்கள் வலிமை பெற்று வருகிறது. வன விலங்குகளைப் பாதுகாப்பது குறித்தும், மரங்களை அதிகளவில் வளர்ப்பது குறித்தும் உலக மக்களிடையே தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், இறந்துப் போன ஒரு மானின் வயிற்றில் 7 கிலோ வரையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

deer

தாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில்,  நன் நான் மாகாணத்தில் உள்ளது குன் சதான் தேசிய வனவிலங்கு பூங்கா. தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்கு பூங்காவிற்கு பார்வையாளர்களாக வந்து செல்வார்கள். இந்த பூங்காவில் 10 வயது உள்ள மான் ஒன்று திடீரென இறந்துள்ளது வனவிலங்கு பூங்காவின் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது. 

deer

இறந்து போன மானின் உடலில் எந்த விதமான காயங்களும் இல்லாதது அவர்களை இன்னும் குழப்பமடையச் செய்தது. இதனால், மானின் சாவில் சந்தேகமடைந்த வனத்துறை அதிகாரிகள் இறந்துப் போன மானின் உடலை, கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்தார்கள். அப்போது இறந்து போன மானின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பைகளையும், ப்ளாஸ்டிக் காபி கப், ரப்பர் கையுறை, துண்டுகள் மற்றும் உள்ளாடைகள் என இருந்து கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர். இப்படி மானின் வயிற்றில் இருந்து ஏழு கிலோ எடை வரை பிளாஸ்டிக் பொருட்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

deer

எப்போதுமே மக்கவே மக்காத ப்ளாஸ்டிக் பொருட்கள் ஏழு கிலோ வரையில் மானின் வயிற்றில் இருந்துள்ளதான் தான் மான் இறந்து போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதே வனவிலங்குப் பூங்காவில் ஏற்கெனவே இப்படி பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு கடற்பசுவின் குட்டி ஒன்று இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பூங்காவில் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக தடைச் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.