திங்கள், புதன், வெள்ளி மாணவிகளுக்கு. செவ்வாய், வியாழன், சனி மாணவர்களுக்கு!

 

திங்கள், புதன், வெள்ளி மாணவிகளுக்கு. செவ்வாய், வியாழன், சனி மாணவர்களுக்கு!

இதன்படி, திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் மாணவிகளுக்கும், மற்ற மூன்று நாட்கள் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படுமாம். இதுக்கு பருத்திமூட்டை குடோவுன்லயே இருக்கலாமே, எதுக்கு இருபாலர் பள்ளின்னு நடத்தணும்?

மேற்கு வங்கம், மால்டா மாவட்டத்தில் கிரிஜா சுந்தரி வித்யா மந்திர் என்ற அரசுப்பள்ளி இருக்கிறது. இந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகளிடமிருந்து வாங்குவாங்கென்று வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறார். காரணம் என்னவென்றால், தலைமை ஆசிரியர் வெளியிட்ட உத்தரவு. அப்படி என்ன உத்தரவு?மாணவர்கள், கூடப்படிக்கும் மாணவிகளை தொந்தரவு செய்வதால், “வாரத்தில் மூன்று நாட்கள் பசங்களுக்கும், மற்ற மூன்று நாட்கள் புள்ளங்களுக்கு  மட்டுமே இனி ஸ்கூல், பொண்ணுங்க ஸ்கூலுக்கு வர்ற மூணு நாளு, பசங்களை ஸ்கூல் பக்கமே நான் பார்க்கக்கூடாது” என்பதுதான் அந்த விசித்திரமான உத்தரவு!

CoEducation

இதன்படி, திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் மாணவிகளுக்கும், மற்ற மூன்று நாட்கள் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படுமாம். இதுக்கு பருத்திமூட்டை குடோவுன்லயே தனித்தனியா இருக்கலாமே, எதுக்கு இருபாலர் பள்ளின்னு நடத்தணும்? தவறு செய்த மாணவர்கள் யாரென்று பார்த்தி, அறிவுரை கூறி திருத்தாமல், பள்ளியையே இரண்டாக பிரித்தால் ஆசிரியர்கள் ஒவ்வொரு பாடத்தையும் இரண்டு முறை நடத்த வேண்டியிருக்குமே? சரி, பாடம் இரண்டு தடவை நடத்திவிடலாம், பரீட்சை எப்படி ரெண்டு நாளில் நடத்துவீர்களா? என கேள்விமேல் கேள்வி தலைமை ஆசிரியருக்கு. உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற உத்தரவிட்டுள்ள அதிகாரிகள், தொடர்ந்து தலைமை ஆசிரியர்மேல் தனிக்கவனம் செலுத்தி விசாரித்து வருகிறார்கள்.