திங்கட்கிழமைக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சமாக உயரக்கூடும்…

 

திங்கட்கிழமைக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சமாக உயரக்கூடும்…

வரும் திங்கட்கிழமைக்குள் நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயரக்கூடும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி இறுதியில் நம் நாட்டில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு தொற்று நோயான கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல நாட்டின் அனைத்து பகுதிகளில் பரவ தொடங்கியது. குறிப்பாக கடந்த மாதம் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 3 தினங்களாக தினமும் புதிதாக 3,500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்

இந்நிலையில் இந்த மாதத்தில் தொடக்கம் முதல் இதுவரை ஒருங்கிணைந்த தினசரி வளர்ச்சியின் விகிதத்தின்படி பார்த்தால் வரும் திங்கட்கிழமைக்குள் நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயரக்கூடும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களி்ன் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது இந்தியாவின் கடினமான மருத்துவ திறன் மற்றும் அதிக சுமை கொண்ட சுகாதார அமைப்புக்கு கடுமையான சவாலாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸால் மொத்தம் 74,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24,385 பேர் குணம் அடைந்துள்ளனர். 2,415 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.