திகார் ஜெயில் வெல்கம்ஸ் யூ மிஸ்டர் சிதம்பரம்…. தர்மத்திற்கு கிடைத்த தீர்ப்பு – ஹெச். ராஜா

 

திகார் ஜெயில் வெல்கம்ஸ் யூ மிஸ்டர் சிதம்பரம்…. தர்மத்திற்கு கிடைத்த தீர்ப்பு – ஹெச். ராஜா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது. சிபிஐ காவல் முடிவடையும் நிலையில் சிதம்பரத்தை  செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் போதிய பாதுகாப்புடன் தனிச்சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tweet

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா “நீண்ட நாட்கள் நடந்த தர்மயுத்தத்தில் முதல் முதலாக தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது…” என்று ட்விட்டரில் பதிவிட்டு அத்துடன் திகார் ஜெயில் வெல்கம்ஸ் யூ என்ற புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.