திகார் ஜெயிலில் தவிக்கும் சிதம்பரம்!  தூக்கம் வராமல் விடிய விடிய தவிப்பு! | கலாய்க்கும் டெல்லி ஊடகங்கள்!

 

திகார் ஜெயிலில் தவிக்கும் சிதம்பரம்!  தூக்கம் வராமல் விடிய விடிய தவிப்பு! | கலாய்க்கும் டெல்லி ஊடகங்கள்!

‘வண்டியும் ஒரு நாள் ஓடம் ஏறும்’ என்கிற பழமொழியை டெல்லிவாலாக்கள் அவர்களுக்கு சாதகமான இந்த நேரத்தில் உபயோகித்து வருகிறார்கள். முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் பல்வேறு முறைகேடு வழக்குகளின் பேரில் திகார் சிறையில் முதல் நாள் சிறைவாசத்தை நேற்று அனுபவித்தார்.

‘வண்டியும் ஒரு நாள் ஓடம் ஏறும்’ என்கிற பழமொழியை டெல்லிவாலாக்கள் அவர்களுக்கு சாதகமான இந்த நேரத்தில் உபயோகித்து வருகிறார்கள். முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் பல்வேறு முறைகேடு வழக்குகளின் பேரில் திகார் சிறையில் முதல் நாள் சிறைவாசத்தை நேற்று அனுபவித்தார். முன்னதாக அவர் மத்திய அமைச்சராக இருந்த பொழுது அமித்ஷாவைக் குறி வைத்து காய்களை நகர்த்தியதாக பரவலாகப் பேசப்படுகிறது. 
இம்முறை திகார் ஜெயிலில்  சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் அறையில் பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி கைது செய்யப்படும் முக்கிய பிரமுகர்கள் அடைக்கப்படுவது வழக்கம். 7வது சிறை வளாகத்தில் 15ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பகுதியில் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ரதுல்புரி, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மைக்கேல் போன்றவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் இதே வளாகத்தில் தான் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் அங்கு 12 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அதே வளாகத்தில் தனி அறையில் தற்போது ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டு உள்ளார்

chidambaram

இந்நிலையில் சிறைச்சாலையில், நேற்றிரவு அவருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும் சாப்பிட்டார். மற்ற கைதிகளைப் போலவே நேற்றிரவு ப.சிதம்பரம் வெறும் தரையில் படுத்துறங்கினார். அவருக்கு ஒரு தலையணையும், தரை விரிப்பும் கொடுக்கப்பட்டது. தரைவிரிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், வசதியாகவே வாழ்ந்துப் பழக்கப்பட்டு, கீழே படுத்துறங்கிய அனுபவமே இல்லாத சிதம்பரம், தூக்கம் வராமல் நள்ளிரவு முழுவதும் விடிய விடிய தவித்துள்ளார் என்று கூறுகின்றன டெல்லி ஊடகங்கள். 

chidambaram

இன்று காலையில் சிதம்பரத்திற்கு தேநீர் மற்றும் பிஸ்கெட்கள் வழங்கப்பட்டன. மதிய உணவாக அவருக்கு சப்பாத்தி, காய்கறிகள், பருப்பு, அரிசி சாதம் ஆகியவை வழங்கப்பட்டன. திகார் சிறையில், மதிய உணவு நேரம் பகல் 11.30 முதல் 12.30 வரை. 3,30 மணிவரை அவர்  சிறையில் அடைக்கப்படுவார்.  3.30 மணிக்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்து நூலகத்துக்கு செல்லலாம். அல்லது வேறு ஏதாவது விளையாட்டில் பங்கேற்கலாம். 6,45 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். 9 மணி வரை அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கப்படுவார். பிறகு அவர் தனது அறைக்கு செல்ல வேண்டும். இந்த தகவல்களை வெளியிட்ட டெல்லியிலிருந்து வெளியாகும் அச்சு ஊடகங்கள் ஜெயலலிதாவின் கைது சமயத்தில் சிதம்பரம் பேசிய பேச்சுக்களின் தொகுப்பையும் வெளியிட்டு சிதம்பரத்தை தற்போது கலாய்த்து வருகிறார்கள்.