தாவூத் இப்ராஹிம் உட்பட 4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு

 

தாவூத் இப்ராஹிம் உட்பட 4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு

மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் உபா சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டிற்கு எதிராக செயல்படும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க முடியும்.

மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் உபா சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டிற்கு எதிராக செயல்படும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க முடியும். அவர்களின் மீதான விசாரணை நடைபெறும் போது குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை முடக்க முடியும். 

imbrahim

இந்நிலையில் தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மவுலானா மசூத் அசார், ஹபீஸ் சயித், சாகி ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகிய 4 பேரை  பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.