“தாலி போடுவதும் போடாததும் என் விருப்பம்”: ரஹ்மான் மகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சின்மயி

 

“தாலி போடுவதும் போடாததும் என் விருப்பம்”: ரஹ்மான் மகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சின்மயி

எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது இல்லை. மாறாக நான் பெருமையாகவும் உறுதியாகவும் உணர்கிறேன்’ என்று கூறியிருந்தார். 

ரஹ்மானின் மகள் கதிஜா முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிவது கடந்த ஆண்டு விமர்சனத்திற்குள்ளானது. சமீபத்தில்   எழுத்தாளர்  தஸ்லீமா நஸ்ரின்  ‘ரஹ்மானின் இசையை நான் விரும்புகிறேன். ஆனால்  அவரது மகளை பார்க்கும் போது எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் படித்த பெண்களைக்கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடியும் என்பது வருத்தம் அளிக்கிறது’ என்று கூறியிருந்தார்.

 

அதற்கு விளக்கமளித்த ரஹ்மானின் மகள் கதிஜா, ஒரு வருடத்திற்குப் பின்பு மீண்டும் இந்த டாபிக் சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு பெண் அணியும் துண்டு உடையின் மீது ஏன் கவனம் செலுத்துகிறீர்கள். ஒவ்வொரு முறையும் இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது. நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்புகிறது.எனது ஆடையால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது இல்லை. மாறாக நான் பெருமையாகவும் உறுதியாகவும் உணர்கிறேன்’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் கதிஜாவுக்கு ஆதரவாக பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில், ’மிகவும் சிறிய உடைகளை அணியும் பெண்களை கண்டித்து அசிங்கப்படுத்துவது போல் தான் புர்கா அணியும் பெண்களை விமர்சனம் செய்வதும்,  புர்கா அணிவதும், அணியாததும் கதீஜாவின் சொந்த விருப்பம்’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர்,  ‘தாலி’  அணிந்துள்ளது மற்றும் குங்குமம் வைத்துக்கொள்வது குறித்து சர்ச்சையாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சின்மயி, நான் தாலி அணியவேண்டும் என்றும் எனது கணவரோ, அவரது குடும்பத்தினரோ கட்டாயப்படுத்துவதில்லை. நானே விருப்பப்பட்டுத்  தான் தாலி அணிகிறேன். தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் எனது சாய்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார்.