தாறு மாறு  லோக்கல்! தரமான லோக்கல்!! பட்டய கிளப்பும்…. மிஸ்டர் லோக்கல் தீம்

 

தாறு மாறு  லோக்கல்! தரமான லோக்கல்!! பட்டய கிளப்பும்…. மிஸ்டர் லோக்கல் தீம்

ஹிப் ஹாப் தமிழா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் கோடைகால விடுமுறையையொட்டி  வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தீம் பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. 

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் வரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். ஹிப் ஹாப் தமிழா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில் படத்தின் தீம் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் இப்படம் மாஸ் படமாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. மிஸ்டர் மிஸ்டர் லோக்கல்… மோத நினைக்காதே… மச்சான் இவந்தான் மிஸ்டர் லோக்கல் என தொடங்கும் தீம் பாடல் வெளியான சிறிது நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களை அதிரவைத்துள்ளது.