தாய் மொழியை மறக்கக்கூடாது: துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

 

தாய் மொழியை மறக்கக்கூடாது: துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

தாய் மொழியை என்றென்றும் மறக்கக்கூடாது என துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னை: தாய் மொழியை என்றென்றும் மறக்கக்கூடாது என துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் பவளவிழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். இதில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, 

தமிழ் மற்றும் தமிழ்நாட்டிற்கும் எனக்கும் நிறைய தொடர்புகள் உண்டு.தாய் மொழிதான், நம்மை உயர்த்தும். தாய்மொழி, தாய் நாடு, பிறந்த ஊர் உள்ளிட்டவற்றை என்றென்றும் மறக்கக் கூடாது. வீட்டில் அம்மா,அப்பா என்றே கூப்பிட்டு பழகங்கள். மேற்கத்திய கலாசார மோகத்தால் நமது நாட்டு வரலாற்றை மறந்து வருகிறோம்.  வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் போன்றோரை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.