தாய் – மகள் தற்கொலைக்கு பில்லி சூனியம், வரதட்சணை கொடுமையே காரணம்: கடிதத்தால் சிக்கிய கணவர் குடும்பத்தினர்!?

 

தாய் – மகள் தற்கொலைக்கு பில்லி சூனியம், வரதட்சணை கொடுமையே காரணம்: கடிதத்தால் சிக்கிய கணவர் குடும்பத்தினர்!?

கடன் தொல்லையால்  தாய் – மகள் தீக்குளித்ததாகக் கூறப்பட்ட வழக்கில், அவர்கள் தற்கொலைக்கு குடும்பத்தினரே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 

திருவனந்தபுரம்: கடன் தொல்லையால்  தாய் – மகள் தீக்குளித்ததாகக் கூறப்பட்ட வழக்கில், அவர்கள் தற்கொலைக்கு குடும்பத்தினரே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு லேகா என்ற மனைவியும் வைஷ்ணவி என்ற மகளும்  இருந்துள்ளனர். சந்திரன் வளைகுடா நாட்டில் வேலைபார்த்து வந்துள்ளார். வைஷ்ணவி தனியார் கல்லூரியில் பி.பி. ஏ படித்து வந்துள்ளார். வருமானம் இருந்ததால்  வீடு ஒன்றைக் கட்ட திட்டமிட்ட தம்பதி ஒரே மகள் வைஷ்ணவி பெயரில் வீட்டைக் கட்டியுள்ளனர். இதற்காக கனரா வங்கியிலிருந்து ரூ. 5 லட்சத்தைக் கடனாகப் பெற்றுள்ளனர்.

sucide

சந்திரனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவரால் வளைகுடா நாட்டில் வேலையைத் தொடர முடியாமல் போயுள்ளது. இதனால் சொந்த ஊர் திரும்பிய அவர், கிடைக்கும் வேலையைச் செய்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து வீடு கட்ட வாங்கிய கடனை ரூ.8 லட்சம் வரை செலுத்தியுள்ள நிலையில்,  தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டிய வங்கி அதிகாரிகள் வீடு மற்றும் நிலத்தைக் கையகப்படுத்தப் போவதாகக் கூறியதாகவும், அதனால் மனமுடைந்து தாய் லேகாவுடன் மகள்  வைஷ்ணவியுடன் தீக்குளித்ததாகவும்  தகவல் வெளியானது. 

crime

இது குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த தற்கொலைக்கு வங்கி காரணமா? என்ற ரீதியில் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட அறையின் சுவரில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டு இருந்தது.

house

அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் வரதட்சணை கேட்டு மிரட்டினர். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் கணவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எங்களுக்கு பில்லி சூனியம் வைப்பது, விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். என்கணவர் வளைகுடா நாட்டிலிருந்து வந்ததற்குப் பிறகு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஆர்வம் காட்டி வந்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தாய் மகள் இருவரின் கையெழுத்தும் அதில் போடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த தற்கொலை வழக்கில் வங்கிக்கு சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது.  

canara

இதைத் தொடர்ந்து வழக்கின்  திடீர் திருப்பமாகச்  சந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தாய் – மகள் தற்கொலைக்கு வங்கியின் மிரட்டல் தான் காரணம் என்று இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வங்கி  முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதும், பிறகு உண்மை செய்தியை அறிந்து அங்கிருந்து கலைந்து  சென்றதும் குறிப்பிடத்தக்கது.