தாய் – தந்தைக்காக ஊரடங்கிலும் சைக்கிளில் காய்கறி விற்ற இளம்பெண் : தேடி சென்று பரிசளித்த போலீசார்!

 

தாய் – தந்தைக்காக ஊரடங்கிலும் சைக்கிளில் காய்கறி விற்ற இளம்பெண் : தேடி சென்று பரிசளித்த போலீசார்!

சந்தையில் காய்கறிகளை விற்று வருகிறார். இவரது தந்தை கடந்த 18 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். 

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்மோனி கோகோயி. வறுமை காரணமாக 12 ஆம் வகுப்பு வரை படித்த இந்த 20 வயது பெண் தனது தாய்க்கு உதவியாக சந்தையில் காய்கறிகளை விற்று வருகிறார். இவரது  தந்தை கடந்த 18 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். 

gg

தற்போது ஊரடங்கு காரணமாக காய்கறி விற்க முடியாமல் இவரது குடும்பம் வறுமையில் வாடி வந்துள்ளது. இதனால் ஜான்மோனி கோகோயி மிதிவண்டியில் காய்கறிகளை வைத்து வீடு வீடாக சென்று விற்பனை செய்து வந்தார். 

gg

இந்நிலையில் இதுகுறித்து அறிந்த அஸ்ஸாம் காவல்துறையினர் அப்பெண்ணுக்கு இரு சக்கர வாகனத்தை வாங்கி பரிசளித்துள்ளனர். எஸ்பி ஸ்ரீஜித் டி உட்பட மாவட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள் இவரைப் பற்றி சமூக ஊடகங்களில் இருந்து தெரிந்துகொண்டு அவருக்கு உதவி வேண்டுமா என்று கேட்டுள்ளனர். ஆனால் அந்த பெண்ணோ சுயமரியாதை காரணமாக பணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.  அதனால் தான்  அவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி பரிசளித்து உள்ளனர்.