தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி!

 

தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி!

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 

3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கு நாளையும், அதற்கு மறுநாளும் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்று பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். 

Modi

இன்று மதியம் தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, பாங்காக்கில் அந்நாட்டு தமிழ்சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருக்குறள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் தாய்லாந்துவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். 

Modi

வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, “எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே… தாய்லாந்து எனக்கு வெளிநாடு போன்று தோன்றவில்லை, சுற்றுப்புறம் உள்ளிட்டவை எனது வீட்டில் இருப்பது போல் உணர வைக்கின்றன” எனக்கூறினார். அதன்பின் தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்காருக்கு என தொடங்கும் குறளை மேற்கோள் காட்டினார். செல்வம் சேர்ந்தால் ஒப்புரவு செய்யவேண்டும். தான் முயற்சி செய்து ஈட்டிய செல்வமனைத்தும் தகுதியுடையவர்க்கு ஒப்புரவாகிய உதவிகள் செய்தற்பொருட்டேயாம் என அவர் பேசியது தாய்லாந்துவாழ் இந்தியர்களை ரசிக்க வைத்தது.