தாய்லாந்து மொழியில் திருக்குறள் : வெளியிடுகிறார் நரேந்திர மோடி..!

 

தாய்லாந்து மொழியில் திருக்குறள் : வெளியிடுகிறார் நரேந்திர மோடி..!

மக்களின் வாழ்க்கையில் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஒன்றரை அடியில், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் சொல்லிவிட்டார் வள்ளுவர்.

உலகப் பொதுமறை, தெய்வ நூல் பல புகழாரங்களைக் கொண்ட ‘திருக்குறள்’ திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்பது அனைவரும் அறிந்தவையே. மக்களின் வாழ்க்கையில் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஒன்றரை அடியில், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் சொல்லிவிட்டார் வள்ளுவர்.

Thirukural

சில நூல்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றாற் போல எழுதப்பட்டிருக்கும். ஆனால், திருக்குறளோ எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதனால், உலகமே இந்த நூலைப் புனித நூலாகப் போற்றி வருகிறது. ஐரோப்பிய மொழிகள், ஆசிய மொழிகள், இந்திய மொழிகள் என பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்க பட்டுள்ளது. 

Modi

இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் நடைபெறும் ஆசியன் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி இன்று தாய்லாந்து செல்லவுள்ளார். 3 நாட்கள் தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ளவுள்ள மோடி, தாய்லாந்தில் வாழும் இந்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை  இன்று வெளியிடவுள்ளார். அனைத்து நாடுகளிலும் பரவும் திருக்குறளின் புகழ், தமிழ் மொழிக்கு மென்மேலும் புகழாரம் சூட்டுகிறது.