தாய்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் பலி – 11 பேருக்கு சிகிச்சை

 

தாய்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் பலி – 11 பேருக்கு சிகிச்சை

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பேங்காக்: தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே சென்றது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பெருமளவு குறைய தொடங்கியுள்ளது.

ttn

இந்த நிலையில், தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ரீடெயில் துறையில் வேலை பார்த்து வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பிப்ரவரி 5-ஆம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அரசு முக்கிய சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ttn

ஆனால் அவரது பல உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார். தாய்லாந்தில் ஜனவரி மாதம் முதல் 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 30 பேர் குணமாகி வீட்டுக்கு சென்று விட்டனர். தற்போது ஒருவர் இறந்து விட, மீதமுள்ள 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.