தாய்லாந்தில் சிக்கிய மகன்கள்… ‘தனி ஒருவள்’லாக மீட்ட தாய்…அலட்சியப்படுத்திய அமைச்சர்..!?

தாய்லாந்தில் சிக்கிய மகன்கள்… ‘தனி ஒருவள்’லாக  மீட்ட தாய்…அலட்சியப்படுத்திய  அமைச்சர்..!?

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி,  பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி,  பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 திருப்பூர் மாவட்டம் குளத்தூர்புதூர் பகுதியை சேர்ந்த மாரியம்மாள், தமது இரு மகன்களை ஏஜெண்ட் ரஞ்சித் மூலம் தாய்லாந்துக்கு அனுப்பினார். ஆனால், அங்கு சரியான வேலையை ஏற்பாடு செய்யாமல் ஏஜெண்ட் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. 

இது குறித்த செய்தியை அறிந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “மாரியம்மாளின் மகன்களை மீட்க இந்தியத் தூதரகம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு இந்திய தூதரகம் உதவி செய்யும் “ என்றும் ட்விட்டரில் தெரிவித்தார்.  ஆனால் மாரியம்மாளின் மகன்களை மீட்க அவர் எந்த நடவடிக்கௌ எடுக்கவில்லை என்பது தான் உண்மை. 

ww

வேலையின்றி தாய்லாந்தில் தவித்த மகன்களை கந்துவட்டிக்கு 4 லட்ச ரூபாய் கடன் வாங்கி சொந்த செலவில் அவர்களது தாய் மீட்டுள்ளார். ஏமாற்றிய ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இரு மகன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டார். இதுகுறித்து பேசிய மாரியம்மாள்,  “ அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது எதுவும் நடக்கவில்லை. எங்களை ஏமாற்றிய ஏஜெண்ட் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்க வில்லை” என ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.