தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் – அமித்ஷா

தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் – அமித்ஷா

தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி தினத்தையொட்டி, வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடக இந்தியா இருந்தாலும் அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு, இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாட்டின் ஒரே மொழியாக இந்தியை அறிவித்தால் மட்டுமே உலகில் இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார். அவருடைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் பாஜக இந்தியை நுழைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினர். 

amitshah

இந்நிலையில் இத்தகைய சர்ச்சை குறித்து அமித்ஷா விளக்கமளித்துள்ளார். தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன் என்றும் மொழிகளை வலிமைப்படுத்த தவறினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்று நமது மொழி என தெரியாமலேயே போய்விடும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.