தாய்ப்பால் கொடுக்க தனி அறையெல்லாம் கிடையாது: பிரபல மால் நிர்வாகம் கருத்தால் சர்ச்சை

 

தாய்ப்பால் கொடுக்க தனி அறையெல்லாம் கிடையாது: பிரபல மால் நிர்வாகம் கருத்தால் சர்ச்சை

தாய்ப்பால் கொடுக்க தனி அறை கோரிய பெண்ணை மால் நிர்வாகம் அவமதித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜதாவ்பூர்: தாய்ப்பால் கொடுக்க தனி அறை கோரிய பெண்ணை மால் நிர்வாகம் அவமதித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் ஜதாவ்பூர் நகரில் ‘சவுத் சிட்டி மால்’ என்ற ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக் கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மால் வளாகத்தில் தாய்ப்பால் கொடுப்பதற்கு தனி அறையும், பெண்களுக்கு கழிவறையும் ஏற்படுத்தி தரவேண்டும் என பெண் ஒருவர் மால் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கு பதிலளித்த மால் நிர்வாகி, “தாய்ப்பால் வழங்குவதற்கு தனி அறையெல்லாம் கொடுக்க முடியாது. ஷாப்பிங் மால் ஷாப்பிங் செய்வதற்கு மட்டும்தான். அதைவிட்டுவிட்டு வீட்டு வேலைகளையெல்லாம் செய்வதற்கு இடமில்லை. அதையெல்லாம் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்” என ஆணவத்துடன் பதிலளித்துள்ளார்.

mall

இதனால் கோபமடைந்த அந்த பெண் சமூகவலைதளங்களில் மால் நிர்வாகியின் செயலை பதிவிட்டதால், பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். இதனையடுத்து, மால் நிர்வாகம் அப்பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும், விரைவில் சவுத் சிட்டி மாலில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தனி அறை ஒதுக்கப்படும் மால் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.