தாய்பால் மூலம் கொரோனாவிலிருந்து மீண்ட பச்சிளம் குழந்தை.. வியக்க வைக்கும் சம்பவம்!

 

தாய்பால் மூலம் கொரோனாவிலிருந்து மீண்ட பச்சிளம் குழந்தை.. வியக்க வைக்கும் சம்பவம்!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

இதுவரை உலகம் முழுவதும்  29ட்சத்து 65ஆயிரத்து 363 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே  3 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய  அரசு நீட்டித்துள்ளது. 

ff

இந்நிலையில் தென் கொரியாவில் பிறந்து 27 நாட்களே ஆன குழந்தை காயச்சலுடன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டது.  குழந்தைக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டது. பச்சிளம் குழந்தை என்பதால் அதற்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிப்பது என குழம்பி போன மருத்துவர்கள் தாய்பால் மட்டுமே கொடுக்க முடிவு செய்தனர். 

tt

அதன் படி 20 நாட்களுக்கு பிறகு நடத்திய சோதனையில் குழந்தைக்கு நெகட்டிவ் என ரிசலட் வந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள மருத்துவர்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி வேறு மாதிரியாக இருக்கும். தாய்பால் சிகிச்சை முறை அனைவருக்கும் ஏற்காது என்று கூறியுள்ளனர்.