தாம்பரம் ரெயில் நிலையத்தில் கண்களை கவரும் ஓவியம் – கொரோனாவை எதிர்த்து போராடுபவர்களுக்கு நன்றி தெரிவிப்பு

 

தாம்பரம் ரெயில் நிலையத்தில் கண்களை கவரும் ஓவியம் – கொரோனாவை எதிர்த்து போராடுபவர்களுக்கு நன்றி தெரிவிப்பு

கொரோனாவுக்காக போராடுபவர்களுக்கு தாம்பரம் ரெயில் நிலையம் தனது முன்பக்க சுவரில் ஓவியம் மூலம் நன்றி தெரிவித்துள்ளது.

சென்னை: கொரோனாவுக்காக போராடுபவர்களுக்கு தாம்பரம் ரெயில் நிலையம் தனது முன்பக்க சுவரில் ஓவியம் மூலம் நன்றி தெரிவித்துள்ளது.

உலக வரலாற்றில் கொரோனா வைரஸ் அளவுக்கு ஒரு தொற்றுநோய் மனிதர்களை ஆட்டிப் படைத்தது இல்லை. கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 33 லட்சத்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

ttn

இந்தியாவைப் பொறுத்தவரை 1154 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 9000 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2300-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1200 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாட்டிலேயே முதன்முறையாக தாம்பரம் ரெயில் நிலையத்தின் முன்பக்க சுவரில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அது பலரது கவனத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது.