தாமிரபரணி புஷ்கர விழா: 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

 

தாமிரபரணி புஷ்கர விழா: 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்காக நெல்லை மாவட்டம் பாபநாசம் படித்துறை உள்ளிட்ட 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கால் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி:

தாமிரபரணி புஷ்கர விழா நெல்லை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு கரை புரண்டு ஓடும் 14 படித்துறைகளில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. தாமிரபரணி புஷ்கரம் விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த புஷ்கரம் விழா கொண்டாடப்படவில்லை .

தாமிரபரணி 1

ஜோதிட அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நதியை ஜோதிட சாஸ்த்திரம் பரிந்துரைத்துள்ளது.அந்ததந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு உடைய நதியை தேர்வு செய்து அந்த நதியில் நீராடி பரிகார பூஜைகள் செய்து,தங்களுடைய கிரக தோஷங்களில் இருந்து தங்களை காத்து கொள்ள முடியும் என்று ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் விருச்சிக ராசிக்கு கூறப்பட்டுள்ள நதி தாமிரபரணி ஆறு ஆகும்.

அதனை தொடர்ந்து எப்பொழுது எல்லாம் துலாம் ராசியில் இருந்து குருபகவான் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறாரோ அப்பொழுதெல்லாம் தாமிரபரணி ஆற்றில் இந்த புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.அதனையடுத்து வருகின்ற அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதிவரை தாமிரபரணி புஷ்கரம் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.144 வருடங்களுக்குப் பின்னர், தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழா கொண்டாட இந்து அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.புன்னக்காயல் வரை பாய்ந்தோடும் தாமிரபரணி நதியில், நூற்றுக்கும் அதிகமான தீர்த்தக் கட்டங்கள் உள்ளன,அவற்றின் முக்கியத்துவம் கருதி அந்த இடங்களில் பக்தர்கள் நீராட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

thamira 45

தாமிரபரணி ஆற்றில் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகள் பல இடங்களிலும் சிதிலமடைந்துள்ளதால் அவற்றை புஷ்கர விழாக்குழுவினர் சீரமைத்து வருகிறார்கள். அதனால் தாமிரபரணி நதியில் சுமார் 140-க்கும் மேற்பட்ட படித்துறையில் சிறப்பு பூஜைகள் செய்யும் அளவுக்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புஷ்கர விழாவின்போது, படித்துறைகளில் சுவாமி எழுந்தருளல், நதி ஆரத்தி ஆகியவை தினமும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 14 படித்துறையிலும் ஆதீனங்கள், வைணவ மடாதிபதிகள், சிவனடியார்கள் பங்கேற்று தினமும் பூஜைகள் நடைபெற உள்ளன. அதனால் படித்துறைக்கான பூர்வாங்கப் பணிகள் கால்கோள் நாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. பாபநாசம் படித்துறையில் சுவாமி ரமானந்த சரஸ்வதியும்  குறுக்குத்துறை படித்துறையில் சுவாமி பக்தானந்த மஹராஜ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து கால்கோள் நாட்டி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

 

thamira