தாமிரபரணி புஷ்கர விழாவில் விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் நீராடி வழிபாடு செய்தனர்

 

தாமிரபரணி புஷ்கர விழாவில் விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் நீராடி வழிபாடு செய்தனர்

தாமிரபரணி புஷ்கர விழாவில் விடுமுறை நாளான இன்று ஆயிரகணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபாடு செய்தனர்.

நெல்லை மற்றும்  துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது.பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 143 படித்துறைகள் பக்தர்கள் நீராடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 

pusahkara vilaa

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடக் கூடிய தாமிரபரணி மகா புஷ்கர விழா இந்த ஆண்டு கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் சார்பாக தாமிரபரணியில் பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை 64 தீர்த்தக்கட்டங்களிலும் இந்த விழா நடைபெறுகிறது. இதில் நாடுமுழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

thaamirbharani

புஷ்கர விழாவில் விடுமுறை தினம் மற்றும் 10-வது நாளான இன்று அதிகாலையிலேயே ஆற்றில் பக்தர்கள் குவிந்தனர். ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர். பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அங்குள்ள இந்திர கீல தீர்த்தம், திரி நதி சங்கம தீர்த்தம், அகஸ்தியர் அருவி போன்ற இடங்களில் புனித நீராடினர்.

இதேபோல் அம்பை, கல்லிடைகுறிச்சி, அத்தாள நல்லூர், சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், முக்கூடல், கோடகநல்லூர், பழவூர், நெல்லை குறுக்குத் துறை, தைப்பூச மண்டபம், வண்ணார்பேட்டை, அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் படித்துறைகளிலும் இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

thamirabharanijk

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் இன்று நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றும் இந்த படித்துறையில் வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் படித்துறையில் புனித நீராடி குரு ஸ்தலமான கைலாசநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்கள்.

pushkaravila

புஷ்கர விழா நடந்துவரும் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் பாதுகாப்புக்காக ஆற்றில் தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்கள் ரப்பர் படகுகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். படித்துறைகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள்.