தாமிரபரணி புஷ்கர விழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

 

தாமிரபரணி புஷ்கர விழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

தாமிரபரணி புஷ்கர விழாவில் நீராடுவதால் உண்டாகும் பலன்களை பற்றியும் எவ்வாறு நதியில் நீராட வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் விரிவாக பார்போம்.

நெல்லை மற்றும்  துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது.பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 143 படித்துறைகள் பக்தர்கள் நீராடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 

thamirabharani

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, மற்றும் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கின்றனர். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களும்  மத நல்லினகத்தை பறை சாற்றும் வகையில் இவ்விழாவில் பங்கேற்றனர்.

thamirabharabi

குருபெயர்ச்சியையொட்டி, தாமிரபரணி நதியில் அக்டோபர் 11 முதல், மகாபுஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. வரும், 23ம் தேதி வரையிலும் இவ்விழா  நடைபெறுகிறது. கடந்த இரு தினங்களாக அனைத்து படித்துறைகளிலும், தீர்த்தக் கட்டங்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 

தாமிரபரணி புஷ்கர விழாவில் நீராடலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பார்போம்:

1. சூரிய உதயத்திற்கு முன் நான்கு நாழிகைகள் (96 நிமிடம்) அருணோதய காலமாகும். அப்பொழுது நீராடுவது சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது காலை      4.24 மணி முதல் 6.00 மணி வரையில் நீராடுவது சிறப்பு என்று சொல்லப்பட்டு உள்ளது.

2. குழந்தைகள்,வியாதியினால் பாதிக்கபட்டவர்கள் வயது ஆனவர்கள் சமயத்திற்குத் தகுந்தவாறு பகலில் நீராடலாம். ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

3. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக்கொண்டு நதியை வணங்கி மெல்ல அதனுள் இறங்க வேண்டும். புண்ணிய நதிகளில் நீச்சலடித்து குளிக்கக் கூடாது. 

4. தூய்மையான வெண்ணிற ஆடை உடுத்திக் கொண்டே நீராட வேண்டும். ஒற்றை வஸ்திரத்தோடு நீராடக்கூடாது. இடுப்பில் ஒரு துண்டை கட்டிக் கொள்ள வேண்டும்.

thamirabharanijk

5. சிகப்பு, கருப்பு, நீல நிறத் துணி, தலைப்பு இல்லாத வஸ்திரம், ஈரமான வஸ்திரம் இவைகளை ஒரு பொழுதும் உடுத்திக் கொண்டு நீராடக் கூடாது. 

6. அரைஞாண் கயிறு (இடுப்புக் கயிறு) இல்லாமல் ஆண்கள் நீராடக் கூடாது. அப்படிச் செய்பவன் நதியில் நீராடிய புண்ணிய பலனைப் பெற மாட்டான்.

7. நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர்முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது. இது பாபமாகும்.

8. நதியில் நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ்வதும், அதில் சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும்.

9. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.

10. நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிரை கையால் உதறக் கூடாது. தலைமயிரில் உள்ள நீர், வஸ்திர நீர் பிறர் மேல் படக் கூடாது. இது எவர் மீது படுகிறதோ அவரிடம்      உள்ள செல்வமெல்லாம் தொலைந்து தரித்திரராகி விடுவார்.

thamirabharanihjk

11. நீராடி முடித்தவுடன்,காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது.

12.நெற்றியில் திருநீறோ அல்லது கோபி சந்தனமோ பூசிக் கொண்டு மீண்டும் ஒரு முறை நதியை வணங்க வேண்டும்.