தாமிரபரணி ஆற்றில் குளித்தால் பாவங்கள் நீங்கும்! – ஆளுநர் புரோஹித் பேச்சு

 

தாமிரபரணி ஆற்றில் குளித்தால் பாவங்கள் நீங்கும்! – ஆளுநர் புரோஹித் பேச்சு

நெல்லையில் நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

நெல்லை: நெல்லையில் நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

தமிழகத்திலேயே உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கலக்கக்கூடிய ஒரே வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி ஆறு திகழ்கிறது. இந்த ஆறானது தமிழ் வளர்த்த அகத்தியர் முனிவர் வாழ்ந்த பொதிகை மலைப்பகுதியில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரையிலான 124 கி.மீ தூரம் பயணித்து கடலில் சங்கமிக்கிறது.

அந்த தாமிரபரணி ஆற்றில் இன்று மகா புஷ்கரணி விழா தொடங்கியுள்ளது. இந்த விழா வருகின்ற 23-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.

அந்த விழாவின் முதலாம் நாளான இன்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டுள்ளார். அதன்பின் நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் பேசிய அவர், தாமிரபரணி ஆற்றுக்கு பாவங்களை போக்கும் சக்தி உள்ளது என்றும், அதில் குளிப்பவர்களின் பாவங்கள் நீங்கும் என்றும் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த ஆற்றை சுத்தமாகவும், தூய்மையாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும் என பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.