தாமிரபரணியை காக்க வழக்கு:அலட்சியம் காட்டிய தமிழக அரசு… நீதிபதிகள் அதிருப்தி!

தாமிரபரணியை காக்க வழக்கு:அலட்சியம் காட்டிய தமிழக அரசு… நீதிபதிகள் அதிருப்தி!

நெல்லை தாமிரபரணி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் சுகாதார சீர்கோடு, உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தவிர்க்க தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் பெயர் கூட குறிப்பிடாமல் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி அடைத்தனர்.விரிவான மனு தாக்கல் செய்ய நெல்லை,தூத்துக்குடி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் சுகாதார சீர்கோடு, உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

chennai high court

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு நடந்த விசாரணையில் நெல்லை மாவட்ட பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கறிஞர் பெயர், கையொப்பம் எதுவும் இல்லை.இதனால் அந்த மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர் வழக்கு தொடர்பாக கருத்து கூறிய நீதிபதிகள், “நெல்லை தாமிரபரணி ஆற்றை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும். தவறினால் அவற்றை வரைபடங்களில் மட்டுமே காண நேரிடும். வழக்கினை மிக முக்கியமானதாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே, நெல்லை மாநகராட்சி ஆணையர் நீதிமன்றம் முன் ஆஜராக உத்தரவிடுகிறோம்.
தாமிரபரணி ஆற்றில் 969 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடிக்கடி கள ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள்.தாமிரபரணி ஆற்றில் எங்கெல்லாம் கழிவு நீர் கலக்கிறது,ஆக்கிரமிப்புகள் உள்ள,அவற்றை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து நெல்லை,தூத்துக்குடி கலெக்டர்கள் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.