தாமரை மலர்கள் களவாடப்பட்டதால் இழுத்துமூடப்பட்ட பூங்கா!

 

தாமரை மலர்கள் களவாடப்பட்டதால் இழுத்துமூடப்பட்ட பூங்கா!

சீனாவில் தாமரை மலர்கள் களவாடப்பட்டதால் பூங்கா ஒன்று இழுத்து மூடப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் தாமரை மலர்கள் களவாடப்பட்டதால் பூங்கா ஒன்று இழுத்து மூடப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பூங்கா கட்டுமான பணிகளுக்கு பின் புத்துயிர் பெற்றி திறக்கபடவிருந்தது. ஆனால் அது திறக்கப்படவில்லை… பூங்காவிலுள்ள தாமரை மலர்கள் அனைத்தும் காணாமல்போனதே பூங்கா திறக்கப்படாததற்கு காரணமாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். .

சீச்சுவான் பகுதியிலுள்ள லாங்க்கியோ என்ற பூங்காவிற்கு அழகு சேர்ப்பதே 250,000 சதுர மீட்டர் பரப்பளவில் நிரம்பியிருக்கும் தாமரை மலர்கள் தான். ஆனால் கடந்த மாதத்திலிருந்து அந்த மலர்களை நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் பறித்துச் சென்றுவிட்டதால் அங்கு தற்போது தாமரை மலர்களே இல்லை என்று பூங்காவின் நிர்வாகக் குழு கூறியுள்ளது. இதனால் பூங்கா இவ்வாண்டு முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் சுமார் 200இலிருந்து 300 பேர் அனுமதி இல்லாமல் பூங்காவினுள் நுழைந்து மலர்களைப் பறிப்பதால் அங்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.