தாமரை தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழிசையின் வீட்டில்கூட மலராது!

 

தாமரை தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழிசையின் வீட்டில்கூட மலராது!

“தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட ஜெயிக்காது” என ஒருவர் கத்த, தமிழிசை உடன் வந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏற்கெனவே தமிழிசையை கேள்விகேட்ட சோபியா என்ற மாணவிக்கு எதிராக தமிழிசை வழக்கு தொடுத்ததும், இன்னொரு ஆட்டோ ஓட்டுநரை தமிழிசையின் தொண்டர்கள் தாக்கியதைப்போல இந்த நபரை யாரும் எதுவும் செய்யவில்லை. காரணம், அந்த எதிர்ப்பு குரலுக்கு சொந்தக்காரர் சுகநாதன். சுகநாதன் வேறு யாருமல்ல, தமிழிசையின் மகன்.

“தாமரை மலர்ந்தே தீரும்” என்பதை தமிழிசை வாடிக்கையாக வைத்திருந்தாலும், ஒட்டுமொத்த தமிழகம் அதை வேடிக்கையாவே கடந்து சென்றது. நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மல்லாந்ததே இதற்குச் சான்று. சரி வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம் என்று நாம் சும்மா இருந்தலும், நடக்கிற சம்பவங்களை சொல்லாமல் இருக்கமுடியுமா? நடக்கிறதை வைத்துப் பார்க்கும்போது, தாமரை தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழிசையின் வீட்டில்கூட மலராது என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Tamilisai

விஷயம் என்னான்னா, வழக்கம்போல சென்னை விமான நிலையத்தில், வழக்கம்போல செய்தியாளர்களை சந்தித்து, வழக்கம்போல தாமரை தமிழகத்தில் மலரும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து சலசலப்பு. “தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட ஜெயிக்காது” என ஒருவர் கத்த, தமிழிசை உடன் வந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏற்கெனவே தமிழிசையை கேள்விகேட்ட சோபியா என்ற மாணவிக்கு எதிராக தமிழிசை வழக்கு தொடுத்ததும், இன்னொரு ஆட்டோ ஓட்டுநரை தமிழிசையின் தொண்டர்கள் தாக்கியதைப்போல இந்த நபரை  யாரும் எதுவும் செய்யவில்லை. காரணம், அந்த எதிர்ப்பு குரலுக்கு சொந்தக்காரர் சுகநாதன். சுகநாதன் வேறு யாருமல்ல, தமிழிசையின் மகன்.

Suganathan

கம்பெனி சீக்ரெட்டை பொது இடத்துல சொல்லாதீங்க தம்பி என அவரை தமிழிசையின் தொண்டர்கள் மல்லுகட்டி இழுத்துசென்றபிறகு, தனக்கும் தன் மகனுக்கும் குடும்பத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதனால்தான் சுகநாதன் இப்படி பேசியதாகவும் தமிழிசை விளக்கம் சொன்னார். தமிழிசைக்கும் அவர் மகனுக்கும் பிரச்னை என்றால், அவர் ஏன் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்காது என முழக்கம் போடவேண்டும்? “பாசிச பாஜக ஒழிக” என தூத்துக்குடி விமான நிலையத்தில் கோஷமிட்ட சோபியா மீது வழக்கெல்லாம் தொடுத்த தமிழிசை அதே கருத்தை சொன்ன தன் மகனமீதும் வழக்கு தொடர்வாரா என்ற கேள்வி எழுவது இயல்புதானே?  முதலில் தமிழிசை தன் குடும்பத்தில் தாமரையை மலரவைக்க முயற்சிக்கட்டும், அதன்பின் தமிழகத்தில் மலர முயலலாம்