தாமரையை வெறுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்…. பள்ளியின் லோகோவில் இருந்த தாமரையை நீக்க முடிவு செய்த பள்ளி நிர்வாகம்….

 

தாமரையை வெறுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்…. பள்ளியின் லோகோவில் இருந்த தாமரையை நீக்க முடிவு செய்த பள்ளி நிர்வாகம்….

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பள்ளியின் லோகாவிலிருந்து தாமரையை நீக்க பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் ரானியா ப்ரீ என்ற தொடக்க நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ஆடையில் அந்த பள்ளியின் லோகோ எம்பிராயிடு செய்யப்பட்டுள்ளது. அந்த லோகோவில் தாமரை இடம் பெற்றுள்ளது. லோகாவில் இடம் பெற்றுள்ள தாமரையை நீக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பள்ளி நிர்வாகத்துக்கு குடைச்சல் கொடுத்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ்

இதனையடுத்து, அந்த பள்ளி நிர்வாகம் தனது லோகோவிலிருந்து தாமரையை நீக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த பள்ளியின் பொறுப்பாளர் பிஜாலி தாஸ் கூறியதாவது: கடந்த 11 ஆண்டுகளாக எங்கள் பள்ளியின் லோகோவில் தாமரை இடம் பெற்றுள்ளது. தாமரை தேசிய மலர் என்பதால் நாங்கள் லோகோவில் தாமரை பயன்படுத்தி வருகிறோம்.

பள்ளி பொறுப்பாளர் பிஜாலி தாஸ்

இந்நிலையில் திடீரென திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் உள்ளிட்ட சிலர் தாமரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாணவர்களின் பெற்றோர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் எதிர்ப்பு கிளம்பியதால் லோகோவில் தாமரையை நீக்க முடிவு செய்துள்ளோம். தாமரைக்கு பதிலாக சர்வா ஷிக்ஷா மிஷன் லோகோவை பயன்படுத்து உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

தாமரை தேசிய மலர் என்பதை கூட நினைவில் கொள்ளாமல், பா.ஜ.க.வின் சின்னம் என்ற ஒரே எண்ணத்தில் கட்சியினர் பள்ளியின் லோகோவில் தாமரை இடம் பெற்றுள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. எந்த அளவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது என்பது நாம புரிந்து கொள்ளலாம்.