தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட தயாரான சன்னி லியோன்

 

தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட தயாரான சன்னி லியோன்

சன்னி லியோன் வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்ற சரித்திர கால வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தான் வரைந்த ஓவியத்தை ஏலம் விட்டு நிதி திரட்டவுள்ளதாகப் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகை சன்னி லியோன்  பாலிவுட்டை கிறங்கடித்ததை தொடர்ந்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்போது சன்னி லியோன் வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்ற சரித்திர கால வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

sunny

இந்நிலையில் சன்னி லியோன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவிற்குத் தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டு அதன்மூலம் கிடைக்கும் பணத்தை அவர்களுக்கு நிதி உதவியாக வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு சன்னி லியோனின் தந்தை  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.