தான் படித்த மதுரை அரசுப்பள்ளிக்கு 15 கோடி அள்ளிக்கொடுத்த ஷிவ் நாடார்!

தான் படித்த மதுரை அரசுப்பள்ளிக்கு 15 கோடி அள்ளிக்கொடுத்த ஷிவ் நாடார்!

இளங்கோ பள்ளிக்கென்று புதியதாக 24 வகுப்பறைகளுடன் இரு கட்டடங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், 15 அடி நீள கரும்பலகை, பள்ளிக்குள்ளேயே தண்ணீருக்காக தனி பிளான்ட், 24 மணி நேர தண்ணீர் வசதி, சூரிய ஒளி மின்சாரத்தில் வகுப்பறைகள் இயங்கும் வசதி, கழிவறைகள் பராமரிப்பு தனியார் வசம், 100 கணினிகளுடன் லேப், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லைப்ரரி, பள்ளி வளாகத்தில் அழகிய பூங்கா என கிடுகிடுவென வேலைகள் நடந்து இப்போது தனியார் பள்ளிகளைவிடவும் அற்புதமான பள்ளியாக வளர்ந்துள்ளது. இவற்றுக்கான செலவு 15 கோடி ரூபாய்கள்.

இளங்கோ நகராட்சி பள்ளி மதுரையில், 1957ஆம் ஆண்டு தாம் படித்ததை மறக்காத ஷிவ் நாடார், 2011ஆம் ஆண்டு அப்பள்ளிக்கு சென்றிருந்தார். ஷிவ் நாடார் பிறப்பதற்கு 8 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1937ல் கட்டப்பட்ட அந்த அரசுப்பள்ளி இன்றைய தேதிக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம். மனசு கேட்கவில்லை ஷிவ் நாடாருக்கு. இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவருக்கு தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டுமென உந்துததல் ஏற்பட, உடனடியாக செயல் திட்டம் வகுத்தார்.

இளங்கோ பள்ளிக்கென்று புதியதாக 24 வகுப்பறைகளுடன் இரு கட்டடங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், 15 அடி நீள கரும்பலகை, பள்ளிக்குள்ளேயே தண்ணீருக்காக தனி பிளான்ட், 24 மணி நேர தண்ணீர் வசதி, சூரிய ஒளி மின்சாரத்தில் வகுப்பறைகள் இயங்கும் வசதி, கழிவறைகள் பராமரிப்பு தனியார் வசம், 100 கணினிகளுடன் லேப், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லைப்ரரி, பள்ளி வளாகத்தில் அழகிய பூங்கா என கிடுகிடுவென வேலைகள் நடந்து இப்போது தனியார் பள்ளிகளைவிடவும் அற்புதமான பள்ளியாக வளர்ந்துள்ளது. இவற்றுக்கான செலவு 15 கோடி ரூபாய்கள்.

Elango School, Madurai

கட்டடங்கள், வசதிகள் செய்து கொடுத்ததோடு நில்லாமல், மாணவர்கள் கற்றுக்கொள்ளும் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்க பல்வேறு பயிற்சிகள் ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இவ்வளவு செய்தபிறகும் அதற்கான கைமாறு கிடைக்காமலா போகும்?

Shiv Nadar

இளங்கோ  பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு  12-ம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர். ந‌ன்றாகப் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, ஹெ.சி.எல் சார்பாக ஸ்காலர்ஷிப் வழங்கவும் திட்டமாம். மகிழ்ச்சி. பெருமகிழ்ச்சி. ஆங், சொல்ல மறந்துட்டேன். முக்கியமான விஷயம், இளங்கோ பள்ளியில் இந்தி எல்லாம் எக்காலத்திலும் பயிற்றுவிக்கப்படவில்லை