தானிய தோசை

தானிய தோசை

ஒவ்வொரு நாளும் அந்த நாளின் ஆரம்பத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் முதல் உணவு தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தந்து ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன் செய்கிறது. நம் காலை உணவு சத்தான உணவாக இருக்க வேண்டும். அதனால் தானியங்களால் செய்த உணவை காலை வேளையில் எடுத்துக் கொண்டால், அன்றைய தினத்திற்கான சத்துக்கள் கிடைக்கிறது.

dhanya dosa

தேவையான பொருட்கள்
அரிசி மாவு -100கி
கேழ்வரகு மாவு -100கி
கோதுமை மாவு -100கி
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
சம  அளவில் எடுக்கப்பட்ட மூன்று வகையான மாவுகளையும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். தோசைக்கல்லைச் சூடாக்கி கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு தோசையாக வார்த்தெடுக்க வேண்டும். காரச்சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட சுவை கூடுதலாக இருக்கும். தேன் தொட்டும் சாப்பிடலாம். வித்தியாசமாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட தானியங்கள் சேரும் போது அதிகப்படியான இரும்புச்சத்து கிடைக்கிறது. எலும்புகள் மற்றும் பற்களின் வலுவிற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்.