தானா சேர்ந்த கூட்டம் பாணியில் சுற்றி திரிந்த நபரை கைது செய்த போலீசார்: காரணம் இது தான்?

 

தானா சேர்ந்த கூட்டம் பாணியில் சுற்றி திரிந்த நபரை கைது செய்த போலீசார்: காரணம் இது தான்?

திரைப்பட பாணியில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரி எனக் கூறிக்கொண்டு வலம் வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை : திரைப்பட பாணியில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரி எனக் கூறிக்கொண்டு வலம் வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் சிபிஐ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆடி சொகுசு கார் ஒன்று, வேகமாக நுழைந்துள்ளது. அப்போது எதிரே வந்த வழக்கறிஞர் ஒருவர்  மீது கார் மோதவே, அங்கிருந்த சக வழக்கறிஞர்கள் சொகுசு காரை சுற்றி வளைத்தனர். காரில் இருந்து இறங்கிய அந்த நபர், தன்னை பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி என கூறியுள்ளார். வழக்கறிஞர்களின் விசாரிப்பின் போது  முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அந்த நபர், அடையாள அட்டை ஒன்றையும் காண்பித்து வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இதனால் சந்தேகமடைந்த வழக்கறிஞர்கள் அவரை எஸ்பிளேனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பிரசாத் என்பதும் போலியான அடையாள அட்டையை கொண்டு, பிரதமர் பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், வழக்கறிஞர்கள் அளித்த புகாரின்பேரில், அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் சூர்யா திரைப்படமான சேர்ந்த கூட்டம் என்ற படத்தில், சிபிஐ அதிகாரிகள் எனக்கூறி அதிகாரம் செய்து ஏமாற்றும் காட்சிகள் இடம்பெறும்.அதே பாணியில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.