தாத்தா வாட்ச்மேன், அப்பா டிரைவராக இருந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக நுழைந்த மகன்!

 

தாத்தா வாட்ச்மேன், அப்பா டிரைவராக இருந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக நுழைந்த மகன்!

இந்தூர்:  தாத்தா வாட்ச்மேனாகவும், தந்தை ஓட்டுநராகவும் பணிபுரிந்த  நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் நீதிபதியாகியுள்ள  சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவர்தன்லால் பஜத். இவர் அதே மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றிவருகிறார். இவருக்கு முன்பாக கோவர்தன்லால் பஜத்தின் தந்தை அந்த நீதிமன்றத்திலேயே வாட்ச் மேனாக  பணியாற்றியுள்ளார். கோவர்தன்லாலுக்கு  மூன்று மகன்கள் இருப்பதால் இந்த நீதிமன்றத்தில் தம் மகன்களில் யாரேனும் ஒருவர் நீதிபதியாகப் பதவி வைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். 

இந்நிலையில் கோவர்தன்லாலின்  மகன்  சேத்தன் பஜத் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் இரண்டாம் வகுப்பு சிவில் நீதிபதியாகி தன் தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளார்.சேத்தன் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தேர்வு மையம் நடத்திய இரண்டாம் வகுப்பு சிவில் நீதிபதிக்கான தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு 257.5 மதிப்பெண்கள் எடுத்துப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பிரிவில் 13வது இடத்தை பிடித்துள்ளார். 

எனது  தந்தையின் கனவை நினைவாகியுள்ளேன். எனது ரோல்மாடல் என் தந்தை தான். இந்த  தேர்வில் ஏற்கனவே மூன்று முறை தோல்வியை சந்தித்து, கடின உழைப்பால் நான்காவது முறையாக தேர்ச்சி பெற்றுள்ளேன். நீதித்துறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நீதியை வழங்க வேண்டும் என்பதே என் ஆசை’ என்றார். நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள சேத்தன் பஜத்துக்கு சமூகவலைதளங்களில்  பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.