தாத்தாவுக்காக தேர்தல் வெற்றியை விட்டு கொடுத்த பேரன்!?

 

தாத்தாவுக்காக தேர்தல் வெற்றியை விட்டு கொடுத்த பேரன்!?

கர்நாடகா ஹசன் தொகுதியில் வெற்றிபெற்ற தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 

கர்நாடகா ஹசன் தொகுதியில் வெற்றிபெற்ற தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம்  படுதோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தேர்தலில்  காங்கிரஸுடன் கூட்டணி வைத்த இந்த கட்சியானது 8 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் களம் கண்டன.

devkavuda

இதில் தேவகவுடாவின் முக்கிய தொகுதியாகக் கருதப்படும் ஹசன் தொகுதியில் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார். அதே போல் மற்றொரு தொகுதியான மாண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். இதில் ஹசன் தொகுதியில் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா  வெற்றி பெற்றார். ஆனால் நடிகை சுமலதாவை எதிர்த்து நின்ற அம்மாநில முதல்வர் மகன்  நிகில் படுதோல்வி அடைந்தார். 

devkauda

குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தும்கூரில் தோல்வியை சந்தித்தார். பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தேவகவுடா வெற்றி பெறுவார் என்று கூறிய நிலையில் அவர் தோல்வி அடைந்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக  வேட்பாளர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்திசாயத்தில் வெற்றி பெற்றார்.

devkauda

இந்நிலையில் கர்நாடகா ஹசன் தொகுதியில் வெற்றிபெற்ற பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். தாத்தா  தேவகவுடா தோல்வி அடைந்ததின் காரணமாக,  அவரை  மீண்டும் போட்டியிட வைக்க  பிரஜ்வல் இந்த முடிவை எடுத்துள்ளார். இது குறித்து கருத்து  கூறியுள்ள அவர், ‘நான் 
 மக்களின் முடிவை மதிக்கிறேன். ஆனால் தாத்தா தேவகவுடா எங்கள் கட்சியின் அடித்தளமாக இருக்கிறார். அதனால் அவருடைய இடத்தை மீட்டெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.