தாடி பாலாஜிக்கு டஃப் கொடுக்க…அவரது மனைவி நித்யா எடுத்த கடைசி அஸ்திரம் !

 

நகைச்சுவை நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருபவர்  நடிகர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்து வந்தார். 

நகைச்சுவை நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருபவர்  நடிகர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்து வந்தார். 

பின்னர் பிக் பாஸ் மூலம் இருவரும் ஒன்றாகைவிட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டும் இருக்கும் சூழலில், மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். 

balaji

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது போல், நித்யாவையும் தற்போது கேமரா முன் வரும் வாய்ப்பை தேடிக் கொடுத்துள்ளது. அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு ஆல்பத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கூடவே, ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம்.

balaji

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சினிமாவுல செகண்ட் ஹீரோயினா கமிட் ஆகியிருக்கேன். ஷூட் கூட தொடங்கிடுச்சு. நடிக்கிறதுக்காக முதன் முதலா கேமரா முன்னாடி நின்னப்ப சிலிர்ப்பா இருந்துச்சி . படத்தின் பெயர், ஹீரோ யாருங்கிற விவரங்களையெல்லாம் முறைப்படி அறிவிப்பார்கள். எனக்குக் கிடைச்சிருக்கிற கேரக்டர் என் ரியல் லைஃப் மாதிரியே இருக்குங்கிறது தான் இதுல ஹைலைட். 

nithya

ஆம்…. கணவனை ஊக்கப்படுத்துகிற கேரக்டர். பாலாஜி சினிமா வாய்ப்பு இல்லாம இருந்த காலத்துல நான் வேலைக்குப் போய் குடும்பத்தை நடத்தினேன். அந்த நாள்கள்ல அவர் விரக்தியா பேசறப்ப அவ்வளவு ஊக்கப்படுத்தியிருக்கேன். நீங்களும் ஒரு நாள் சினிமாவுல நல்ல இடத்துக்கு வருவீங்கனு அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன். அது நடந்ததது. ஆனா அதுக்குப் பிறகு நடந்ததெல்லாம் வேற மாதிரி ஆகிடுச்சு. இந்தப் படத்துல என் கேரக்டர் பத்திச் சொன்ன நிமிடம், அந்த ஃபிளாஷ் பேக்தான் நினைவுக்கு வந்துச்சி’ என்று கூறியுள்ளார்.