தாஜ்மஹாலைக்கூட விற்றுவிடுவார் மோடி! – ராகுல் கடும் தாக்கு

 

தாஜ்மஹாலைக்கூட விற்றுவிடுவார் மோடி! – ராகுல் கடும் தாக்கு

மேக் இன் இந்தியா என்று கூறும் மோடி, இந்தியாவில் அத்திட்டத்தின் கீழ் ஒரு தொழிற்சாலையைக் கூட கட்டவில்லை… அதற்கு பதில் தாஜ்மஹாலைக் கூட விற்றுவிடுவார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.

மேக் இன் இந்தியா என்று கூறும் மோடி, இந்தியாவில் அத்திட்டத்தின் கீழ் ஒரு தொழிற்சாலையைக் கூட கட்டவில்லை… அதற்கு பதில் தாஜ்மஹாலைக் கூட விற்றுவிடுவார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்று பேசி வருகிறார். ஆனால் இத்திட்டத்தின் கீழ் உ.பி மாநிலத்தில் ஆக்ராவில் ஒரு தொழிற்சாலையைக் கூட அமைக்க முடியவில்லை.

rahul

இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கி, ஏர் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ரயில்வே… ஏன் செங்கோட்டையும் அவர் விட்டுவைக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் அவர்கள் ஒரு நாள் தாஜ்மஹாலைக் கூட விற்றுவிடுவார்கள். 

taj

பிரதமர் மோடிக்கு மதம் பற்றிய புரிதல் இல்லை. எந்த ஒரு புனித நூலும் வன்முறையைப் பற்றிப் பேசுவது இல்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் வேலையை வன்முறையை பரவச் செய்வதுதான்” என்றார்.